ஐம்பதாயிரம்?

ஒரு புகைபட கலைஞனாக என்னை அறிமுக படுத்திக்கொண்டாலும், நான் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல… இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு வந்த எனக்கு, பெங்களூரு சொல்லி தந்த பாடங்கள் எத்தனை எத்தனை ஆயிரம், அள்ளி வழங்கிய நண்பர்கள் எத்தனை எத்தனை நிச்சயம் கணக்கில் இல்லை.

சரி. விஷயத்துக்கு வருவோம். நான் எடுத்த படங்களை பாடங்களாக மாற்றிய பெருமை பிளிக்கர் வலை தளத்துக்கு உண்டு. என்னை போன்ற எத்தனையோ நண்பர்களின் படங்களை பார்பதற்கான ஒரு அறிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது மட்டுமல்லாமல், நண்பர்களை அறிமுகபடுத்திய பெருமையும் பிளிக்க்ருக்கு உண்டு.

இது நாள் வரை நான் என் கணக்கில் வைத்திருக்கும் நான்காயிரதுக்கும் மேற்பட்ட படங்களை ஐம்பதாயிரம் முறைக்கு மேல் பார்வையிட்டு இருக்கிறார்கள். நான் பெருமை பட்டுக்கொள்ள வேண்டிய விஷயமா நிச்சயம் தெரிய வில்லை எனக்கு. என்னை பொறுத்தவரை இது ஒரு மைல்கல். இன்னும் தொடவேண்டிய தூரங்கள் பல. எட்ட வேண்டிய வானங்கள் பல.

இருப்பினும் “ஐம்பதாயிரம்” என்பது கொண்டாட படவேண்டிய எண். அனைவருக்கும் நன்றி. வாழ்த்துங்கள். வணங்குகிறேன்.

இதோ உங்கள் பார்வைக்கு.
50000

Leave A Comment

You must be logged in to post a comment.